தமிழ்நாட்டில் ஏப்ரல் இறுதி அல்லது, மே மாதம் தொடக்கத்தில் 2026-க்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதால் ஆளும் திமுக ஓராண்டிற்கு முன்னரே தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. எதிர்கட்சியான அதிமுக. பாமக . தேமுதிக. போன்ற காட்சிகளின் தலைவர்கள் , தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வரிசையில் . ” பரபரப்பு செய்தி ” புலனாய்வு இதழும் 2026 தேர்தல் சட்டமன்ற தொகுதி வாரியாக “கள நிலவரங்களை, வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
“திருப்பத்தூர் “மாவட்ட தலைநகரான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கழகங்களின் கள நிலவரம் நிலவரம்* குறித்து விரிவாக காண்போம் …
திருப்பத்தூர் தொகுதி 1952 முதல், தேர்தலை சந்தித்து வருகிறது. கந்திலி, புதூர் நாடு மலை , சுந்திரம்பள்ளி , திருப்பத்தூர் நகரம் . போன்ற முக்கிய பகுதிகள் திருப்பத்தூர் தொகுதிக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த தொகுதியை பொறுத்தவரை,
பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்கள் வெள்ளாளர்கள் , இங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கிறார்கள்.
அடுத்து செங்குந்தர் . அகமுடையார் சமுதாயத்தினரும் . ஆதிதிராவிடர்களும் பெருமளவில் வாக்கு வங்கியில் அதிகாரமிக்கவர்களாக உள்ளனர்
பழங்குடியின மக்களள் 11 சதவீதத்தினரும் இஸ்லாமியர்கள் , 7 சதவீதமும் , 2 சதவீதம் கிறிஸ்துவர்களும் , ஜெயின், ரெட்டி போன்ற இதர சமூகத்தினர் 5 சதவீதம் பேர் வாக்கு வங்கியை வைத்துள்ளார்கள் . . இதுவரை திருப்பத்தூர் தொகுதி . திமுக கட்சியின் உடைக்க முடியாத எஃகு கோட்டையாக இருந்து வருகிறது
கடந்த கால வெற்றி நிலவரம்
1951 ல் நடைப்பெற்ற முதல் தேர்தலில் . காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெற்றார் சுயேட்சையாக வேட்பாளரான ராகவ முதலியார் . 1957-ல் சுயேட்சை வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக வெற்றி பெற்றது அதனையடுத்து வந்த 5 தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று திருப்பத்தூரை கோட்டையாக்கி தன் வசப்படுத்திக் கொண்டது
1984-ல் திமுகவை வீழ்த்தி காங்கிரஸ் இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்றது ,
1985 இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றியை தக்கவைத்துக் கொண்டது, அதன்பிறகு 1989 மீண்டும் திமுகவும்
1991-ல் ராஜீவ் படுகொலையின்போது நடைபெற்ற தேர்தலிலும் . 2g ஊழல் பெரிதாக பேசப்பட்ட 2021 தேர்தல் உள்பட . அதிமுக 2 முறை மட்டுமே திமுக கோட்டையில் ஆதிக்கம் செலுத்தியது ,.
2001 . 2006 ல் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் பாமக 2 முறை தொடர்ந்து வெற்றிக் கனியை பறித்தது
2016 . 2021 தேர்தலில் தொடர்ந்து வெற்றியை தக்கவைத்த திமுக, 2026-ல் நடைப்பெற போகும் தேர்தலில் , தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று தனது கோட்டையை தக்கவைக்குமா ? என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
2026 -ல் திமுக வென்றால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்ற கட்சியாகவும் . இந்த தொகுதியில் அதிக முறை ( 9) வென்ற கட்சி திமுக என்ற சாதனையை படைக்கும்
திமுகவில் யாருக்கு சீட் ?
சாலை வசதிகள், ரேசன் கடைகள் என தொகுதி முழுவதும் ஓரளவிற்கு நிறைவேற்றியதை தவிர்த்து, சொல்லிக் கொள்ளும்படி பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. அதிமுக ஆட்சியில் கலைக் கல்லூரி கொண்டுவரப்பட்டது . பிரமாண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் கட்டப்பட்டது. இவைதவிர மாவட்டத்திற்கு தேவையான மெடிக்கல் காலேஜ். இன்ஜினியரிங் கல்லூரி . பூங்காக்கள். பஸ்நிலையம் விரிவாக்கம். , ஆவின் பால் பண்ணை. சிப்காட். பள்ளிக்கூடங்கள் விரிவாக்கம். மாவட்டத்திற்கென்று மத்திய கூட்டுறவு வங்கி . பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் தட்டுப்பாடு நகரத்தில் உள்ள .
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போதிய கட்டிட வசதிகள் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மூடு விழாவுக்கு தள்ளப்பட்டுள்ளது .. நகரத்திற்குள் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காதது , போன்ற பெரிய திட்டங்களை செய்யாமல் கோட்டை விட்ட நல்லதம்பி , 10 வருட பதவியில் தனது அருணா கன்ஸ்ட்ரக்ஷனை’ தான் பெரிதாக்கி கொண்டார், என்கின்றனர் உடன்பிறப்புகள் ,
எடப்பாடி பழனிச்சாமியின் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எடப்பாடி முதல்வராக இருந்த போது அவரை சந்தித்து காண்ட்ராக்ட் தொழில் வளத்தை பெருக்கியவர் என அப்போது பேச்சுக்கள் எழுந்தன. , ஏலகிரி மலையில் ரிசார்ட்ஸ் ,திருப்பத்தூர், காட்பாடி, வேலூர். ஆரணி . சென்னை வரை பினாமி பெயர்களில் சொத்துக்கள் நீளுகிறது . சிஎம் மாப்பிள்ளையின் குட் புக்கிலும் , மாவட்டத்தின் பொருப்பு அமைச்சரை அப்பா ஸ்தானத்தில் பார்ப்பதால். மீண்டும் எங்கள் தம்பிகுதான் தான் சீட் உறுதி , மூன்றாவது முறை வென்று மந்திரியாவார் என்கின்றனர் கட்சியின் சீனியர் உடன்பிறப்புகள்,

நல்லதம்பி எம்எல்ஏ ( திமுக)
மறைந்த அதிமுக எம்எல்ஏ , கேஜி ரமேஷ் இடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் எஸ் .ராஜேந்திரன். இவரும் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர். மறைந்த அண்ணாமலை கவுண்டர்., நல்லத்தம்பி எம்எல்ஏ-வின் அப்பா அண்ணாதுரையோடு அரசியல் பழகியவர் தொகுதிக்குள் . இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கலைஞரின் முரட்டு பக்தரான இவருக்கு அவர் தலைமையில் தான் திருமணம் நடந்தது . தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக. திருப்பத்தூர் நகர கழக செயலாளராக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு பஞ்சாயத்தெல்லாம் செய்வதில்லை , அதற்குப் பதிலாக வாண்டட்டாக வண்டியில் ஏறி, கட்சி பேதமின்றி தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் பங்கெடுத்து வருகிறார்.
குறிப்பாக கட்சி தொண்டர்களின் நிகழ்வுகளில் தவறாமல் ஆஜாராகி விடுகிறார் . இவர் பழைய எஸ் ஆர் இல்லைங்க என்கிறார்கள் அவரோடு இருக்கும் உடன்பிறப்புகள், அவர்கள் சொல்வதற்கு தகுந்தார் போலவே . “எஸ் ராஜேந்திரன் என்ற பெயரை “வழக்குறைஞர் சு. இரேசேந்திரன் ” என தூய தமிழில் நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டுள்ளார் . நெற்றியில் திலகமில்லாமல் வெளியே வருவதில்லை. பிரபல ஜோதிடர் ஒருவர் அண்ணனை அந்த அளவுக்கு மாற்றியுள்ளார். கண்டிப்பாக பாருங்க “மந்திரி காந்தி’ ஆசியுடன் இம்முறை எம்எல்ஏவாகி விடுவார் என அடித்து சொல்லுகிறார்கள் அவரது நட்பு வட்டதினர் .

ராஜேந்திரன் ( திமுக)
இவர்களைத் தவிர, மாவட்ட துணை செயலாளர் ஜிம் மோகன். அறங்காவலர் குழு தலைவர் . சந்திரசேகர் . TND சுபாஷ் . ஆகியோரும் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது
அதேபோல் திருப்பத்தூர் திமுக கோட்டையில் கட்சிக்கென்று நகரம் மற்றும் மாவட்டத்திற்குகென சொந்த அலுவலகம் அமைக்காமல் அவர்களின் பிசினஸ் டீலிங்காக தனித்தனியாக ஆஃபிஸ் அமைத்துக் கொண்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர்
அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு ?
கடந்த 13-ந்தேதியன்று திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி . ஏலகிரி மலையில் பிரச்சாரம் செய்யும் போதா மாஜி வீரமணியை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டே ஜோலார்பேட்டை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார் . மேலும் திருப்பத்தூரில் அதிமுக வெல்ல வேண்டும் என்றாராம், அதனாலதான், மாஜியே ஜோலார்பேட்டை தொகுதியை விட திருப்பத்தூர் தொகுதியில் களத்தில் இறங்குகி . திமுக கோட்டையான திருப்பத்தூரை வென்று திருப்புமுனையை ஏற்படுத்துவேன் என நிர்வாகிகளிடம் சபதமேற்றுள்ளதாக கூறுகின்றனர்

டாக்டர் திருப்பதி ( அதிமுக)
அதிமுகவில் , கால்நடை மருத்துவரான டாக்டர் திருப்பதி , ஒன்றிய சேர்மனாக இருந்தவர் தற்போது ஒன்றிய செயலாளராக இருக்கும் இவர் , வசதி படைத்தவர் , எடப்பாடி பழனிச்சாமி சமூகமான வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் , இந்த சமூகத்தினர் தொகுதி முழுவதும் கணிசமாக நிறைந்துள்ளனர் , அமைதியான அன்பான ஆர்பாட்டமில்லாத அரசியல்வாதி . தொகுதி முழுவதும் இவரை அறியாதவர்கள் இல்லை. கொடுக்கும் தொகையை பெற்றுக் கொண்டு ஒரு சேவையாகவே கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் , மாற்று கட்சியினர் மத்தியிலும் நற்ப்பெயரை கொண்டவர், ஆரம்பகாலம் தொட்டு அதிமுக குடும்பத்தைச் சார்ந்தவர் , இந்த முறை எங்க டாக்டருக்கு தான் சீட் . அதை மேலிடமே உறுதி செய்துவிட்டது, என்கிறார்கள் எம்ஜிஆரின் பக்தர்கள்.

டிடி சங்கர் ( அதிமுக)
இவரைத் தொடர்ந்து, மாஜி-யின் பினாமியான டிடி சங்கர், 2016-ல் ரஜினி மன்ற நிர்வாகியாக இருந்தவர் . மாஜி வீரமணி ஆசியோடு அதிமுகவில் ஐக்கியமாகி மாவட்ட பாசறை செயலாளர், நகரத்தில் வார்டு கவுன்சிலர் சமீபத்தில் கத்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக்கப்பட்டவர் இப்படி எல்லா வைகையிலும் கிடுகிடுவென உயர்ந்து நிர்கிறார்
இவர் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர் . நகரத்தை தவிர்த்து சுற்றியுள்ள பகுதிகளில் வன்னியர்கள், வெள்ளாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என நிறைந்த தொகுதி . இந்த தொகுதிக்கு தெரியத முகமாகவும் இருக்கிறார் . வீரமணியின் கட்டுபாட்டில் இவர் இருப்பதால் சீட்டு நிச்சயம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சங்கருக்கு சீட் வழங்கினால் தோற்பது நிச்சயம் . திமுக சுலபமாக வெற்றி பெறும் என்கிற குரல்களும் ஓங்கி ஒலிக்கிறது,
சங்கரை சம்பந்தமே இல்லாத ஒன்றியத்திற்கு செயலாளராக்கிய மாஜிக்கு எதிரான கண்டன குரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை, ஒன்றிய செயலாளரை மாற்றாத காரணத்தால் கந்திலி கிழக்கு ஒன்றிய அதிமுகவினர் சிலர் திமுகவுக்கு தாவி மாஜிக்கு பயத்தை காட்டி வருகின்றனர்,
இவர்களைத் தவிர ஏற்கனவே தோல்வியை சந்தித்த “டிடி குமார் ,’ டாக்டர் லீலாவதி கணவர் “சுப்பிரமணியம் ‘ வக்கீல் ரவிக்குமார்’ ஆகியோரும் விரிசை கட்டி நிற்கிறார்கள்
திருப்பத்தூர் தொகுதியில் மாஜி வீரமணியே . களத்தில் இறங்குவதால் , திமுக கோட்டையில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி வாகை சூடிய , எம்எல்ஏ நல்லதம்பி , மூன்றாவது முறை வென்று மந்திரியாகி விடலாம் என இருப்பவருக்கு. இந்த தேர்தலில் வெற்றி எளிதாக கிட்டாது . விஜய். சீமான் போன்ற நடிகர்கள் கட்சிகள் பலர் போட்டியிட்டாலும் , “நல்லதம்பி VS திருப்பதி” – (பங்காளிகளுக்கிடையேதான்) பலமான போட்டி இருக்க போகிறது . என்ற குரல் “இரு கழகங்களிடம்” கேட்க தொடங்கியுள்ளது
தொடர்ந்து திமுக மூன்றாவது முறை வென்று “ஹாட்ரிக்” நிகழ்த்துமா ?… அல்லது அதிமுக வென்று திருப்பத்தூரை திருப்புமுனையை ாற்படுத்துமா ? .. என பொருத்திருந்து பார்போம்.
– மகேஸ்வரன்
