அன்புமணி பதவி நீட்டிப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சியின் செயல்தலைவரான அன்புமணிக்கு இடையே நீண்ட காலமாக நடைபெறும் அதிகார மோதல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2024 டிசம்பர் முதல் தொடர்ந்து வரும் இந்த மோதல் பாமகவை நிலைகுலைய வைத்துள்ளது.மாம்பழ சின்னத்தின் உரிமை கூட சந்தேகத்திற்குரியதாகி வருகிறது.மோதலின் முக்கிய
புதுச்சேரியில் பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே முதல் பகிரங்க மோதல் வெடித்தது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல்தலைவராக இறக்கம் செய்தார் ராமதாஸ்.
ராமதாஸ் தன்னை கட்சித் தலைவராக அறிவித்தார். அன்புமணி செயல்தலைவராக மட்டுமே இருப்பார் என அறிவித்தார். இரு தரப்பும் நிர்வாகிகளை மாற்றி மாறி நீக்கத் தொடங்கினர். மாமல்லபுரம் வன்னியர் இளைஞர் மாநாட்டில் “கட்சி ஒரு தனி மனிதனின் சொத்து அல்ல.” ராமதாஸ் மேடையில் அன்புமணியை எச்சரித்தார்.
அன்புமணியை “வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைக்கிறான்” அன்புமணி தனது அம்மா மீது பாட்டிலை வீசியதாக குற்றம் சாட்டினார். இரு தரப்பும் நிர்வாகிகளை நீக்கி, புதிய குழுக்களை அமைக்கின்றனர். அன்புமணி “மக்கள் உரிமை மீட்புப் பயணம்” அறிவித்தார். ராமதாஸ், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தினார். என் எதிரிகளை விட அசிங்கமான வேலையை அன்புமணி செய்கிறார்.” எனத் தெரிவித்தார். அன்புமணியின் மனைவி சௌமியா மற்றும் ராமதாஸின் துணைவியார் சுசீலா இடையே மோதலே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது.
அன்புமணிக்கு 16 குற்றச்சாட்டுகளுக்கு செப்டம்பர் 10க்குள் பதில் அளிக்குமாறு கெடு விதித்து பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை என ராமதாஸ் எச்சரித்தார். பதில் இல்லாததால் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். “பயிரிடும்போது களைகள் வரும், அகற்ற வேண்டும்” எனக்கூறினார் ராமதாஸ். இடற்கு பதிலடியாக “ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை” அன்புமணி தரப்பு தெரிவித்தது. திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டுகின்றனர். அன்புமணி வரவுள்ளதாக மோதல் வெடித்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அலுவலகத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
87 வயதான ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர விரும்புகிறார். 56 வயதான அன்புமணி செயல்தலைவராக இருந்தாலும், தனித்தலைமை விரும்புகிறார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக ராமதாஸ் அறிவித்ததை அன்புமணி எதிர்த்தார்.
இந்நிலையில். ‘‘அன்புமணி தலைமையில் நடைப்பெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட “தற்பொழுதுள்ள நிர்வாகிகள் 2026 ஆகஸ்டு வரை தொடர்வதற்கான” தீர்மானத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் டாக்டர் அன்புமணி அவர்கள் தலைமயில் இயங்கும் கட்சி தான் பாமக என உறுதியாகிறது. பாமகவின் மாழ்பழச் சின்னமும் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணியோடு இருப்பவர்கள்தான் பாமக நிர்வாகிகள்’’ என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இதனால் மொத்தமாக ராமதாஸ் கூடாரமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
