விஜய் பற்றிய சீமானின் விமர்சனங்கள் நாம் தமிழர் கட்சியின் அடையாளத்தை வலுப்படுத்தலாம். ஆனால் விஜயின் பெரிய ரசிகர் பட்டாளங்கள் சீமானுக்கு சவாலாக உருவெடுத்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன், ‘ ‘விஜய் அரசியலுக்கு வர வேண்டும். எங்களை ஆதரிக்க வேண்டும்’’ என்றார் சீமான். விஜயை “தம்பி… தம்பி…” என பாசமாக அழைத்து ஆதரவாக பேசினார் சீமான். 2024-தவெக விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு சீமான், விஜயின் கட்சி பெயரை விமர்சித்து, “திராவிடம் பற்றி பேசும் விஜய், ‘உலக வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைக்கலாமே” என்று கிண்டலடித்தார். கொள்கையில்லாதவர் விஜய் என விமர்சித்தார். ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டுமல்ல வேற எந்த நடிகனுக்கும் அரசியல் ஆசை வரக்கூடாது என தடாலடியாக மாறினார் சீமான்.
சமீபத்தில், ‘‘உச்சத்தை விட்டுவிட்டு யார் வர சொன்னார்கள்? என் அன்புச் சகோதரர் அஜித்தும், ஐயா ரஜினிகாந்தும் தங்கள் புகழை விளம்பரமாக்க விரும்பவில்லை. 1.5 மணி நேரம் ஆனாலும், காகிதத்தை பார்க்காமல் பேசுவார் ஐயா எம்.ஜி.ஆர். போலவே ஐயா விஜயகாந்த் மனதில் இருந்து மக்கள் மொழியில் பேசுவார். ஆனால் தம்பி…” என கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் சீமானின் பேச்சு குறித்து, ‘‘விஜய்யை ஶ்ரீமான் (சீமான்) எவ்வளவு திட்டினாலும், அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை. இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி, தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது. 15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள். விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது.
தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது. 2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம். இக்கட்சியின் தொண்டர்கள் இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயின் ஆதரவாளர்கள், ‘‘பாலியல் வழக்குல மன்னிப்பு கேட்க சொல்லி சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர் ஒரு மானமுள்ள கட்சி தலைவராம். மற்ற தலைவர்களை கேள்விகளால் துளைத்து எடுப்பாராம். போய் சீக்கிரம் மன்னிப்புகேளுங்கள். இல்லை என்றால் ஜெயில் தண்டனை உறுதி. எந்த அளவிற்கு அந்த சீமான் அல்லது பிறர் அவரை பற்றி கெட்ட வார்த்தைகள் பேசினாலும், விஜய் அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. அவரது முழு கவனமும் திமுக மீதும், அவரது மக்களிடமும் தான் உள்ளது. இந்த சீமான், சரத், கருணாஸ், வடிவேலு போன்றவர்கள் விஜய்க்கு எதிராக பேசுபவர்கள் அவருக்கு ஒரு சிறிய கவனமும் தரவில்லை.
அவர் மக்களை சந்திக்கவும், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு தயாராவதிலும் மிகவும் பிஸியாக உள்ளார். அவர்கள் பற்றி ஒரு பதிலும் அளிக்க மாட்டார். இந்த மக்கள் அரசியலில் பயனற்றவர்கள். அவர்கள் அரசியலை எப்படி செய்ய வேண்டுமெனவே தெரியாது. விஜய் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானவர். அவர்கள் பேச்சுக்கு பதிலடியோ அல்லது கவனமோ கொடுக்க மாட்டார். அவரது நோக்கம் வெற்றியை நோக்கியே இருப்பதால் ஆணித்தரமான அரசியலை முன்னோக்கிச் செல்கிறார்’’ என்கின்றனர்.
