செங்கோட்டையன் முன்வைத்த 10 நாட்கள் கெடு முடிவு, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், பாஜக-அதிமுக கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளோடு அண்ணாமலை குறித்து அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பற்ற வைத்த விவகாரம் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு திமுக அமைச்சர்களுடன் இருக்கும் தொடர்புகள் குறித்த ஃபைல்களையும் கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து அமித் ஷாவிடம் எடுத்துச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக ஒன்றிணைய வேண்டும் என டிடிவி.தினகரன், ஓபிஎஸ் பேசுறது எல்லாமே அண்ணாமலை தூண்டுதல்தான். அவர் சொல்கிறபடி தான் இவர்கள் நடந்துகொள்கிறார்கள். அண்ணாமலையால் தான் முன்பு பாஜக கூட்டணியில் இருந்தே அதிமுக விலகியது உங்களுக்கு தெரியும். நீங்களும் மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை மாத்தினீங்க. அதனால்தான் நாங்களும் கூட்டணியில இணைந்தோம். இப்போது அண்ணாமலைக்கு பதவியே இல்லாத நிலைமையிலும் அதிமுகவுக்கு எதிராக ரொம்பவே பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார்.
திமுகவுடன் சேர்ந்து கொண்டுதான் அண்ணாமலை இதையெல்லாம் செய்கிறார். திமுக அமைச்சர்களுடன் அண்ணாமலை எப்படி எல்லாம் நெருக்கமாக இருக்கிறார் தெரியுமா? அண்ணாமலை ஜஸ்ட் வாட்ஸ் அப்ல ஒரு மெசேஜ் அனுப்பினாலே போதுங்க. அவர் சொல்கிற வேலையை தட்டாமல் உடனடியாக எந்தெந்த அமைச்சர்கள் செய்து கொடுக்கிறார்கள் என்கிற லிஸ்ட் இதில் இருக்கிறடு. கோவை, தொண்டாமுத்தூர் அருகே இக்கரை , நொய்யல் ஆற்றுக்கரையில் 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கி இருக்கிறார். இதை விற்றதே அதிமுக மூத்த தலைவர் ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.
அண்ணாமலை நிலம் வாங்கியதில் சிக்கலே இல்லங்க. ஆனால் 80 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் 4 1/2 கோடின்னு மதிப்பீட்டு பத்திரப்பதிவு செய்து இருக்கிறார். இதுதான் இப்போ சர்ச்சையா வெடிச்சிருக்கு. ஆனால் இதற்கு அண்ணாமலை விளக்கமும் கொடுத்து விட்டார். பால் பண்ணை வைக்க போவதாகவும் பிரதமரின் திட்டத்தின் கீழ் கடனுதவி வாங்கப் போவதாகக் கூறினாலும் அந்த விவகாரம் கமுக்கமாக முடிக்கப்பட்டு விட்டது.
இந்த லேண்ட் டீலிங் அதிக செலவே இல்லாமல் ரொம்ப கமுக்கமாக, சீக்ரெட்டாக முடித்துக் கொடுக்க முழு உதவியாக இருந்ததே திமுகவின் அந்த அமைச்சர் தான். அந்த அமைச்சருக்கும் அண்ணாமலைக்குமான லிங்க் விவரங்களை தான் நான் எடுத்துட்டு வந்து இருக்கிறேன்’’ என அண்ணாமலையை வைத்து திமுக அமைச்சர்களுக்கும் நெருக்கடி கொடுக்க இரு தரப்பையும் கொளுத்திப் போட்டிருக்கிறார் இபிஎஸ்.
அடுத்து, ‘‘ முதல்வர் வேட்பாளரை மாற்றினால் தான் பாஜக கூட்டணிக்கு திரும்ப வருவேன் என செங்கோட்டையன் டிடிவி .தினகரன் சொல்வது எல்லாமே அண்ணாமலையால்தான். நான் முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியை கவிழ்க்க திமுகவுடன் இணைந்து ஓபிஎஸ், டிடிவி. தினகரன் ஆகியோர் என்னெல்லாம் செய்தார்கள் என அப்போதைய உளவுத்துறையின் ஸ்ட்ராங்கான ரிப்போர்ட்டு கொடுத்து இருக்கிறது. அதுவும் இந்த ஃபைலில் இருக்கிறது. இந்த பாருங்க இவ்வளவு ரிப்போர்ட் இருக்கு. இவர்களை மறுபடியும் சேர்த்தால் என்ன ஆகும் என நான் சொல்ல வேண்டியது இல்லை.
இருந்தாலும் உங்களுடைய தெளிவுக்காக நான் மறுபடியும் சொல்கிறேன். ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி. தினகரன் என்று பிரிந்து போனவர்கள் அதிமுகவில் சேர்த்தாலும் என்னை பலவீனப்படுத்த வேண்டும் என்று தான் அவர்கள் நினைப்பார்கள். அதனால் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்க தீவிரமாக அவர்கள் வேலை செய்வார்கள். நமது கூட்டணி வெற்றிக்கு அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்.
எங்கள் கட்சியில் எந்த ஒரு நிர்வாகியும் சரி, கட்சி தொண்டனும் சரி, டி டிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களை பக்கத்திலேயே சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களை மீறி கட்சியில் சேர்த்தால் கட்சிக்குள் குழப்பம் வரும். அது அதிமுக -பாஜக கூட்டணிக்கு தான் கடுமையான பாதிப்பை தரும்’’ என இபிஎஸ் ரொம்ப அழுத்தமாக அமித்ஷாவிடம் எடுத்துக்கூறியதாக சொல்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.
