தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஐ இணைத்து வைக்கப் பட்டுள்ள பேனர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் அதிமுக இணைப்பு வேண்டி ஓபிஎஸ் – இபிஎஸ் ஐ ஒன்றிணைத்து தொண்டர்கள் விளம்பர பதாகை வைத்துள்ளதால் பெரியகுளம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பதாகையில் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது படங்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் “தமிழகத்தை காப்போம்” ” கழகத்தை ஒன்றிணைப்போம் ” “பிரிந்துள்ள தொண்டர்களை ” ” தலைவர்களே “, ஒன்று சேருங்கள், 2026 ல் வென்றிடுவோம் எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது
