2021 ஜூலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக அரசியலில் கவனிக்கத்தக்க நபராக மாறினார். அண்ணாமலைக்கு ஆதரவு தளம் உருவான காலகட்டத்தில் அவருக்கு ஆதரவான அலை உருவானது. காரணம் தடாலடியாக திமுகவை ஓப்பனாக விமர்சித்தது, கூட்டணி கட்சியான அதிமுகவை கூட டார்கெட் செய்து பேசிய நடவடிக்கையால் பரபரப்பை ஏற்படுத்தினார். அண்ணாமலை மீது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கோபமடைந்தார்க. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணிகளில் இருந்து வெளியேறியது அதிமுக. சட்டமன்றத் தேர்தலையொட்டி எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை ஏற்று அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கிவிட்டு தலைவர் ஆக்கப்பட்டார் நயினார் நாகேந்திரன்.
அப்போது முதல் நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலை தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். நயினார் நாகேந்திரனுடன் ஒட்டவே இல்லை. டிடிவி,தினகரன் அண்ணாமலையை புகழ்ந்து பேசியதோடு நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து டிடிவி. தினகரனை சந்தித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கையில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை கூட்டணி கட்சிகளை ரொம்ப நல்லபடியாக கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனால் முடியவில்லை. எல்லா தலைவர்களும் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் நயினாரை விட அண்ணாமலை தான் சரியாக அவருடைய பணிகளை செய்கிறார். எல்லா தலைவர்களும் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் நயினாரை விட அண்ணாமலை தான் சரியாக அவருடைய பணிகளை செய்கிறார். தன்னையே கூட்டணியை ஒன்றிணைக்கக்கூடிய நபராக வெளிக்காட்டிக் கொள்கிறார். எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பை தாண்டி பாஜக தலைவரால் செய்ய முடியாத அதிமுக ஒருங்கிணைப்பை அண்ணாமலை தான் செய்கிறார் என்கிற கருத்தை டெல்லி பாஜக மத்தியில் உருவாக்க வேண்டும் என அண்ணாமலையின் செயலுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
ஒரு வேலை எப்படியாவது ஒரு வலுவான கூட்டணி அமைக்க அண்ணாமலை, தினகரனை அழைத்து வந்து விடுவார். ஓபிஎஸையும், செங்கோட்டையனையும் சரிக்கட்டி வழிக்கு கொண்டு வந்து விடுவார். எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவது போல் கூட்டணி அமைத்து விட்டால் அதற்கு முழுமையான காரணம் அண்ணாமலை என்கிற கருத்தை உருவாக்க வேண்டும். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதற்கு மறைமுக காரணம் அண்ணாமலைதான் என்கிற பேச்சை உருவாக்க வேண்டும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும் அதற்கு அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது தான் காரணம் என பேச வைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் இந்த ஆட்டத்திற்கான மிக முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை தலைவராக இருந்தபோது கட்சியினுடைய முக்கிய விஷயங்களில் மற்ற எந்த தலைவரும் பெரிதாக உள் நுழைந்ததில்லை. ஒரு முறை அண்ணாமலை குறித்து மாற்றுக் கருத்துக்கு சொன்ன மூத்த தலைவரான தமிழிசையை ஒரு விழா மேடையில் வைத்து கண்டித்தார் அமித் ஷா. ஆனால் இப்போது பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை விமர்சித்த தலைவரையே தனியாக போய் சந்தித்து வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில் பாஜகவில் அண்ணாமலைக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி அது. அதனால் தான் புது அண்ணாமலை ஆட்டத்தை ஆரம்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகையால்தான் நயினார் இப்போது மக்கள் சந்திப்பு நடத்தப்போவதாகவும், மக்களை நேரடியாக போய் சந்தித்து மக்களோடு மக்களாக நிக்க போறேன் என தனி ரூட் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி மேலிடம் கொடுத்துள்ள இந்த பொறுப்பால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை சந்தித்து என்டிஏ கூட்டணியில் இணைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருவதால் எடப்பாடி பழனிசாமிக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளார் அண்ணாமலை.
