முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இந்தப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நான் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன். அவர் ஆன்மிகம் குறித்துப் பேசுவார். சில அறிவுரைகள் கூறுவார். அவரை குருவாகப் பார்க்கிறேன்.
வெளிப்படையாக எனது கருத்துகளைப் பேசி வருகிறேன். யாரையும் ஒளிந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
அரசியல் நிலவரம் குறித்து டி.டி.வி தினகரனிடம் பேசினேன். மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன். இந்த கோரிக்கையை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்
ஓபிஎஸ் தற்போது பயணம் செய்து வருகிறார். அதனை முடிக்கும் போது அவரையும் சந்திப்பேன்.
-அண்ணாமலை, பாஜக
