தொகுதி வாரியாக மக்களை சந்திக்க சுற்று பயணத்தை தொடங்கிவிட்டார் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். ஒவ்வொரு தொகுதியிலும், மாவட்டத்திலும் எந்த அளவுக்கு திட்டங்களை அரசு கொண்டு போய் சேர்த்திருக்கிறது? அதனால் மக்கள் எந்த அளவுக்கு பயன் பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக இளைய சமூகத்தினர், மகளிர் எந்த அளவுக்கு பலன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்? மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் பெண்களுக்கு வேறு என்னென்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என அந்த திட்டங்களை பட்டியலிட்டு தன்னுடைய பரப்புரையை முன் வைக்கிறார்.
காஞ்சிபுரத்தில் பேசியபோது மகளிர் உரிமை திட்டத்தால கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பலன் அடைந்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே ஒரு லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இப்போது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு இருக்கிறோம். அனைத்து மகளிருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்கப்போகிறது. அதற்கான திட்டத்தையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என பாஸிட்டிவாக பதிவு செய்து வருகிறார் உதயநிதி.
வரும் தேர்தலில் அதிகளவில் திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் உதயநிதி. 2021ல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 57 தொகுதிகளை ஒதுக்கியது. திமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்கிறார்கள். ஆனால் சென்றமுறையைப் போலவே கூட்டணி கட்சிகளை குறைவான எண்ணிக்கையில் அடக்கிவிட வேண்டும் என கணக்குப் போட்டு வருகிறது திமுக.
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை மூன்றில் ஒரு பங்காவது இளைஞரணி, மாணவரணியினருக்கு சீட் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இப்போதைக்கு குறைவில்லாமல் நாற்பதில் இருந்து 50 சீட்டுகள் உதயநிதி கோட்டாவுக்கு ஒதுக்கப்படும் என இளைஞரணி, மாணவர் அணியினர் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு ஒரு வகையில திமுகவில் இருக்கும் இளைஞர்கள், மாணவர் அணியினர் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு நன்றி தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் விஜயின் வருகையால் தவெகவில் அதிக அளவில் இளம்பட்டாளம் பயணிக்கிறது. இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட 87 லட்சம் புதிய இளைய சமூகத்தினரின் வாக்குகளும் இருக்கிறது.
பல்வேறு தேர்தல்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 25 தொகுதிகளில் வெறும் 5000 வாக்குகளுக்கும் குறைவாகத்தான் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த 5000 வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும் இளைய சமுதாயம் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டால் அது திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தடுக்க அதிக அளவிலான புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு பெண்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்துவதாகவும் அறிவாலயம் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இப்போடு உதயநிதியின் பரப்புரைகளை எடுத்துக் கொண்டால் அதிக அளவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை டார்கெட் செய்து பேசுகிறார். அதாவது முதலமைச்சராக பதவியில் இருந்த எடப்பாடிக்கு பழனிசாமியை டார்கெட் செய்து பேசுகிறார். அவருமே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பதிலடி கொடுக்கிறார். அதாவது முதலமைச்சராக பதவியில் இருந்தவர் இப்போது துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய நம்மை டார்க்கெட் செய்தால் அதனால் கூடுதல் மதிப்பு என உதயநிதி விரும்புகிறார்.
இதன் மூலமாக எங்களுடைய எதிரி எடப்பாடி தான். நீங்கள் சீனிலேயே இல்லை என்பது போல் விஜயை ஓரம் கட்டலாம் என நினைக்கிறார் உதயநிதி. ஆரம்பத்தில் விஜய் வருகையின்போது உதயநிதிக்கு போட்டி எனப்பேசப்பட்டது. அதைவிட பெரிய எதிரி தான் என்னுடைய போட்டி என நிறுவ முயற்சி செய்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
