தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என்பவருக்கு எதிராகப் போராடும்.
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூட நம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்.
