தான் டாக்டர் என்றும் இங்கு டைட்டில் ஜெயித்தால் அந்த பணத்தை சொந்தமாக பெரிய பிஸியோதெரபி மருத்துவமனை கட்டி குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்போவதாக அவர் கூறினார்.
திவாகரை உள்ளே அனுப்பும் முன் உங்களுக்கு யாருக்காவது கைகாட்ட வேண்டும் என்றால் காட்டிக்கொள்ளுங்கள் என கூறினார். அப்போது திவாகர் தான் எல்லோருக்கும் காட்டுவதாக சொல்லி கையை தூக்கி காட்டினார். அதை பார்த்து மொத்த ஆடியன்ஸ் கூட்டமும் சைலண்டாக இருந்தது.
‘கைத்தட்டுங்க பாவம்’ என சொல்லி விஜய் சேதுபதி எல்லோரிடமும் சொன்னார். “ஒரு மனுஷன் எவ்ளோ உற்சாகமா வந்திருக்காரு. இவ்ளோ சைலண்டா இருக்கீங்க” என சொல்லி அவரை கலாய்த்தார் விஜய் சேதுபதி.
