வேளாண் துறை மூலம் சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல்லை மானிய விலையில் கொடுப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
விதை நெல், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெல் கொள்முதலில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது. நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
