
சென்னை:”மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலை, திருவள்ளூரில் நிறுவப்படும்,” என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில், துணை முதல்வர் உதயநிதி, 2,810 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளையும் வழங்கினார்.
அவர் பேசுகையில், ”டாக்டர், இன்ஜினியர், அரசியல்வாதி உள்ளிட்டோரை உருவாக்கும் ஆசிரியர்களாகிய உங்களுக்கு, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு உள்ளது.