தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின் தலைவராக வேலூர் சையது இப்ராஹிம் பதவி வகித்து வருகிறார். மேலும் பாஜகவில், தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவரது மகன் அப்துல் ரகுமான். இந்நிலையில், அப்துல் ரகுமான் காரில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சென்னை பாடி குப்பம் பகுதியில் வைத்து அப்துல் ரகுமான் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ரஷித் ஆகியோரை திருமங்கலம் காவலர்கள் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவும், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா வந்தது.? அதனை எங்கு விற்பனைக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
