விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவுக்கு ஆண்டாள் சூடிய மாலை, வஸ்திரம், கிளி ஆகியவை அனுப்பப்பட்டன. கருட சேவையன்று ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைச்சூடி ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுச்சேலை அனுப்பப்பட்டது. அந்த பட்டு சேலை நேற்று ஊஞ்சல் சேவையின் போது ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட.இதையடுத்து திருப்பதி பட்டுச்சேலையில் ஆண்டாளும், சிறப்பு அலங்காரத்தில், ரெங்கமன்னாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
