திண்டுக்கல்லில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கில் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பங்காரு நாயுடு மகன் இளையராஜா(43) என்பவரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இளையராஜா நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.
இதுதொடர்பாக நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இளையராஜாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
