
அ.தி.மு.க.வில் சலசலப்புகள் தொடங்கியிருக்கிறது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். அதனைத்தொடர்ந்து அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் மற்ற தலைவர்கள் தங்களிடம் பேசுகிறார்களா?என்ற கேள்விக்கு ” அது சஸ்பென்ஸ்!” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். தே.ஜ.கூட்டணியிலிருந்து அ.ம.மு.க. வெளியேறியுள்ளது. அதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ். வெளியேறி விட்டார். புதிய தமிழகம் எதையும் அறுதியிட்டு கூறவில்லை. தே.ஜ.கூட்டணியிலிருந்து தன் மக்களுக்கு எதுவுமே செய்ய இயலவில்லை என்று ஜான்பாண்டியன் பேசிவிட்டார். அவரும் விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்று பேச்சு கிளம்பி விட்டது. அண்ணாமலையோ,” கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் நல்லதாகத்தெரியவில்லை!” என்று தற்போது கூறியிருக்கிறார். டெல்லி மேலிடம் எல்லாவற்றையும் பார்த்து,கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே நமக்கு கிடைத்த தகவல் எடப்பாடி பல்வேறு சித்து வே லைகளைச்செய்து அமித்ஷாவையே வளைத்து விட்டார் என்று முக்கிய பிரமுகர்கள் சொல்கிறார்கள். அண்ணாமலையை மாற்றியதே எடப்பாடியின் அழுத்தத்தால் என்றே சின்ன குழந்தை கூட சொல்லும். ஆனால் அண்ணாமலை மீது பிரதமர் மோடி நல்ல அபிப்ராயத்தையே வைத்துள்ளார் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.
அதிமுக கட்சிக்குழப்பங்கள், வெளியேற்றங்கள் பிஜேபிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதால் விவாதங்கள் வியர்த்துக்கொட்ட வைக்கிறது.
இதனால் அடுத்த மாதம் 23 -ந்தேதி தமிழக பி.ஜே.பி.யிலேயே ஒரு பெரிய மாற்றம் வருமென டெல்லி பட்சி சிறகடிக்கிறது.
வரும் வாரத்தில் ஒரு மங்களகரமான நாளில் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் தென்ன்னகத்திலிருந்து ” அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டுமெனவும்அறிக்கை விட அதிகம் வாய்ப்பிருக்கிறதென பேச்சிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
செங்கோட்டையன் பூனைக்கு மணிக்கட்டியிருக்கிறார். அண்ணாமலை வெகு அமைதியாக மெளனப்புரட்சி செய்கிறார்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!” என்ற கோஷங்கள் அதிமுகவிற்கு மட்டுமல்ல…. கூட்டணியிலிருக்கும் பிஜேபிக்கும் பொருந்துவதால் ஒற்றுமை முழக்கம் மேலும் ‘தீ’ யாய் பரவலாம்.