
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்க திட்டமிட்டு இருந்த பாஜகவுக்கு ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்த, செங்கோட்டையன் வடிவில் சிக்கலைச் சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்த விவாதங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட அரசியல் ஆர்வலர் ஒருவர், “அதிமுகவில் இருந்து பிரிந்த தன்னுடன் கூட்டணியில் இருந்தவர்களை ஒதுக்கினால் அவர்கள் அனாதை என்று நினைத்தார்கள். அந்த இடத்தில் தான் ஓபிஎஸ் சுதாரித்துக் கொண்டு திருப்பி அடித்தார். எனக்கும் சுயமரியாதை இருக்கிறது என்றார். அது பாஜகவே எதிர் பாராத ஒரு ட்விஸ்ட். சில நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார் . தென் மாவட்டம், கொங்கு மண்டலத்தில் ஒரு 60 இடங்களிலிருந்து போட்டியிட்டு 30, 40 இடங்களிலாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த பாஜகவிற்கு இது எதிராகிவிட்டது. ஏனென்றால் கூட்டணியை அவர்கள் திறந்து விட்டு வெளியேறுகிறார்கள்.
இது பாஜகவிற்கு எதிர்பாராத ட்விஸ்ட்.
தென் மாவட்டங்களில் பயணம் செய்த அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ தான் என்றார். மறுநாளே தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிகமான இடங்களில் போட்டியிட்டு தனி பெரும்பான்மை பெறுவோம் என்றார். இந்த கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்வதன் உள்ள அர்த்தம் என்னவென்றால் நிறைய தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் எனபது. அதனால்தான் அவர் பர்சண்டேஜ் கணக்கு போடுகிறார். நீங்கள் 21 சதவ்கிதம் என்றால், நாங்கள் 18 சதவிகிதம். அதற்கேற்றார் போல் தொகுதிகளை பிரித்துக் கொள்வோம். நீங்கள் 124 தொகுதிகளில் போட்டியிட்டால், நாங்கள் 109 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று அமித் ஷா கேட்டு வருகிறார். 100 சீட்டுக்கு குறையாமல் கேட்க போகிறார்கள்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. அந்த அளவிற்கு தொகுதிகளை கொடுத்து விடக்கூடாது என நினைத்து தனி பெரும்பான்மை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால், தாங்கள் விரும்புகிற இடம் கிடைக்காது என்று வருகிறபோது பாஜகவின் எடப்பாடி பழனிச்சாமி பலவீனப்படுத்த வேண்டும் என நினைக்கிறது. அதனால் தான் செங்கோட்டை வைத்து காய் நகர்த்துகிறது. செங்கோட்டை மட்டுமல்ல. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உட்பட பலரும் பாஜகவின் அனுதாபிகளாக உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு நடுவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில் தலங்களான ராமேஸ்வரம், பழனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட 16 இடங்களை குறிப்பிட்டு இந்த சட்டமன்றத் தொகுதிகளை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் எனச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா.
‘‘இது அதிமுக தொகுதி. நாங்க நின்று வெற்றி பெறுகிற தொகுதி. அப்படி எல்லாம் கொடுத்து விட முடியாது’’ என சொல்லி மறுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியானால் இவரை பலவீனப்படுத்த வேண்டும் என நினைக்கிறது பாஜக.
அதை எடுத்து மூன்று நாள் கழித்து தான் நான் வெளிப்படையாக பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் கொளம்பினார்.
இதற்கு இன்னொரு அழுத்தம் கொடுத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். நாங்கள் துரோகி என சொல்லி வெளியே அனுப்பினார். அவரை எப்படி முதலமைச்சர் வேட்பாளராக வைத்துக் கொண்டு நாங்கள் இருப்போம் என்று வெளிஏறினார். இந்த டிவிஸ்ட் புதுசு.
இதனால், பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இப்போது அதிமுக- பாஜக கூட்டணி மிகப்பெரிய பலவீனம் ஆகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமியை பலவீனப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதெல்லாம் பாஜகவினுடைய அஜண்டா இப்போது கிடையாது. இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும் 30 பேர் எம்எல்ஏ ஆனால் போதும். அதற்கு பிறகு மற்றதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்பது பாஜகவின் திட்டம்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பிராண்டு கிடையாது. செங்கோட்டையன்தான் அதிமுகவின் பிராண்ட். டிரேட் மார்க். அதிமுககாரர் செங்கோட்டையன். ரொம்ப நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை தவிக்கவிட்டு வருகிறார். அவர் சொன்ன ஆட்களை தடுப்பது, வேறு ஆட்களை போடுவது என அவருக்கு எதிராக வேலை செய்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பொறுத்தவரை தான் யாரும் எதிர்க்க முடியாத தலைவராக இருக்க வேண்டும். செங்கோட்டையன் கிரவுண்ட் லெவல் வேலை செய்பவர். அவரை 1970-ல் பொருளாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அப்படியானால் அவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டும்? தொடர்ந்து ஜெயித்துக் கொண்டு வருகிறார். அப்படியாகப்பட்ட ஆள் அவர்.
அப்படி இருக்கும்போது எப்படி அவரது ஆதரவாளர்கள் அவரை விட்டு செல்வார்கள்? கொங்கு மண்டலம் துரோகம் செய்வதிலும், முதுகில் குத்துவதிலும் பேமஸான ஒரு இடம். அப்படிப்பட்டவர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். ஆனாலும் செங்கோட்டையன் கிரவுண்ட் லெவல் அரசியல்வாதி. ஆகையால் அவருக்கான ஆதரவு இன்னமும் இருக்கிறது. இன்னும் ஒரு பத்து நாட்களுக்குள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் இந்த நாலு பேரும் என்ன செய்வார்கள் என்றால் என்பதை பொறுத்துதான் எடப்பாடி நிலைமை என்னவாகும் என்பது தெரியும். அவர்களும் எதிர்த்தால் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் கதை கந்தலாகிவிடும். இந்த நால்வரையும் நம்பி இருக்க முடியாது. என்றைக்கு வேண்டுமானாலும் மதில் மேல் பூனை தான். இவர்களுக்கெல்லாம் ஒரு சர்வைவல் பாலிடிக்ஸ் தேவைப்படுகிறது.இவர்கள் அரசியலில் இருந்தாக வேண்டும். ஆகையால் இவர்கள் எல்லாம் மறுபடியும் ஒரு அணிச்சேர்க்கைக்கு போகலாம்.
டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், விஜய் என ஒரு கூட்டணி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடியை எதிர்த்து தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், அன்பழகன் எல்லாம் வரவில்லை என்றால், டிடிவி, ஓபிஎஸ் எல்லாம் விஜய் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. டிடிவி.தினகரன் கட்சி 2019ப் 21 லட்சம் வாக்குகளை பெற்றது, அது அதிமுகவின் ஓட்டு. 2021 இல் 28 தொகுதிகள் அதிமுக தோற்றது. அதற்கு காரணம் டிடிவி.தினகரன் அந்த வாக்குகளை பிரித்தது தான். அதிமுககாரனுக்குத் தான் அதிமுகவில் இருப்பவர்களின் ஓட்டு விழும். அதிமுகவை கையில் வைத்திருப்பதால் அதிமுகவினர் ஓட்டு நமக்கு தான் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உண்மை நிலவரம் அப்படி கிடையாது. அதைத்தான் ஓபிஎஸ் நிரூபிக்கிறார். டி.டி.வி.தினகரன் நிரூபிக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.