
ஓடும் பேருந்தில் தங்க நகைத் திருடியதாக திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி (50). என்ற பெண்மணி ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு அரசு பேருந்து மூலம் கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்
அப்போது , தான் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தங்க நகைத் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அது குறித்து . கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வரலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்
இதனையடுத்து, , காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், வாலட்சுமியை பின் தொடர்ந்து ஒரு பெண் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்த அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சந்தேகப்படும்படியான அந்த பெண் சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளது போலீஸுக்கு தகவல் கிடைத்தது
பிறகு,. அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, திருப்புத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி (53) என்று தெரியவந்தது.
இவர் ஊராட்சி தலைவி என்பதால் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தயக்கத்தோடு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைவைத்து ஆய்வு செய்தபோது அவர்தான் என உறுதிசெய்துக் கொண்டனர்
தொடர் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில்
10 திருட்டு வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.