திண்டுக்கல், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஜாபர்சாதிக், முருகன் தலைமையிலான குழுவினர். தருமத்துப்பட்டி, ஆடலுார், பன்றிமலை, கோனுார், குட்டத்துப்பட்டி, குமார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டபோது
ஆடலுாரில் ஏற்கனவே பிடிபட்ட கடையில் 3-வது முறையாக குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதியில் 7 கடைகளுக்கு சீல் வைத்து. 45 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் ரூ.2.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது
