திண்டுக்கல், செம்பட்டி, போடிகாமன்வாடியை சேர்ந்த தங்கவேல்(60)- நீலாவதி(55) தம்பதியனரின் மகன் சண்முகவேல்(35) இவருக்கும் செம்பட்டி, பாளையங்கோட்டை சேர்ந்த பாக்யராஜ் மகள் நந்தினி(30) இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நந்தினியின் அண்ணன் தங்கசடையான்(36), நண்பர் மணிகண்டன்(30) இருவரும் நேற்று சண்முகவேல் வீட்டிற்கு பேசுவதற்காக சென்றபோது சண்முகவேல் வீட்டில் இல்லாத நிலையில் தாய் நீலாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கச்சடையான், மணிகண்டன் இருவரும் இரும்பு கம்பியால் நீலாவதியை சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நீலாவதி இன்று உயிரிழந்தார்.
இது குறித்து செம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தங்கசடையான் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
