தொலைத்த பணத்தை 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்
சென்னை வேப்பேரியில் தேன்மொழி என்பவர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்தனர் போலீசார்!
பணத்தை தவறவிட்ட பெண் அழுதுகொண்டிருந்ததை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளை அனுப்பி புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோ ஓட்டுநரை கண்டறிந்து போலீசார் பணத்தை மீட்டுள்ளனர்.
