
டிரம்ப் ஒருபுறம் இந்தியாவுடனான நட்பு பற்றி பேசு சிலாகிக்கிறார். மறுபுறம், இந்தியாவை முதுகில் குத்தத் தயாராகி வருகிறார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து மாபெரும் சதித்திட்டத்தை தீட்டி வருகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை கடுமையாக்கி உள்ளார். இந்த முறை அவரது டார்க்கெட் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நாடுகள் மீது நேரடி அட்டாக்காக உள்ளது. அதில் இந்தியாவும் சீனாவும்தான் முதல் டார்க்கெட்.
புடினுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமானால், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மீது 100% வரை இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தெளிவாகக் கூறியுள்ளார். இந்த ஒட்டுமொத்த முயற்சியின் நோக்கமும் எண்ணெய் வணிகத்தில் இருந்து ரஷ்யாவின் வருவாயை பலவீனப்படுத்துவது. இந்தியாவும், சீனாவும் ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கும் வரை, உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பொருளாதார அடி கொடுப்பது கடினம் என்று டிரம்ப் நம்புகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தூதர் டேவிட் ஓ’சல்லிவன், பிற மூத்த அதிகாரிகளுடனான ஒரு மாநாட்டு அழைப்பின் போது டிரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா, சீனா மீதான வரிகளை அதிகரித்தால், அமெரிக்காவும் இந்த உத்தியில் அதனுடன் நிற்கும் என்றும் டிரம்ப் நிர்வாகம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் கூறுகையில், ‘‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால், நாங்களும் அமெரிக்காவை அதை ஆதரிப்போம்’’ என்று எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் முன்பும் இந்தியா, சீனா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சமீபத்தில், அவரது நடவடிக்கையின் பேரில், இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் சில பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இதனால் மொத்த வரி 50% ஐ எட்டியுள்ளது. இதுவரை அவர் 100% வரி போன்ற பெரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றாலும், இந்த முறை அவரது தொனியிலும், உத்தியிலும் கண்டிப்பு தெளிவாகத் தெரிகிறது.
ஒருபுறம் டிரம்ப் இந்தியா மீதான கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் குறித்தது அதிருப்தி நிலவியதற்கு இடையில், அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார் டிரம்ப். விரைவில் பிரதமர் மோடியுடன் பேசவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து டிரம்ப் இந்தியாவுடனான உறவை முற்றிலுமாக கெடுக்க விரும்பவில்லை. ஆனால், ரஷ்யாவில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள அழுத்தம் கொடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தையும் விமர்சித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதியை இன்னும் முழுமையாக நிறுத்தவில்லை என்று அவர் கூறுகிறார். கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யாவில் இருந்து எரிவாயு இறக்குமதி சுமார் 19% ஆக இருந்தது. ஆனாலும், இந்த சார்புநிலையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறது.
இப்போது டிரம்பின் இந்த அழுத்தம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் அதன் உத்தியையும் மாற்ற வேண்டியிருக்கலாம். இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமாக பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் டிரம்பின் இந்தப் புதிய கோரிக்கைக்குப் பிறகு, இந்தியா மீது வரி அடிப்படையிலான உத்தியையும் பரிசீலிக்கலாம்.