
- அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்!!
டெல்லிகில்லி சொன்ன அதிரடித்தகவல்கள்!
அதிமுக முன்னாள்அமைச்சர் செங்கோட்டையன் ஹரித்துவார் போவதாக சொல்லி விட்டு டில்லியில் திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஒரு நபரை அதே கூட்டணியிலிருக்கும் உள்துறை அமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து அழைத்துப்பேசியிருப்பது விவரமறிந்தவர்களுக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கோட்டையன் அப்பாயிண்மெண்ட் கேட்காமல் அதுவும் அமித்ஷாவே அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து செங்கோட்டையனை அழைத்து பேசியதுதான் தனிச்சிறப்பு என்கிறது டெல்லி வட்டாரம்.
அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பில் நடந்தது என்ன? என்று டெல்லியின் கில்லியான ஒரு முக்கியபிரமுகரிடம் கேட்டோம். அவர்நம்மிடம், “செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த பிரமுகர். அம்மாவின் விசுவாசியாகவே எப்போதும் இருப்பவர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்தவர். அவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமித்ஷா அழைத்து பேசியிருக்கிறார். அப்போது அமித்ஷா, “பிஜேபியால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது. நீங்களே ஒரு குழுவாகச்சென்று பழனிசாமியிடம் பேசிப்பார்த்துவிட்டு எனக்கு தகவல் சொல்லுங்கள்!” எனக்கூறி செங்கோட்டையனை சில மாதங்களுக்கு முன் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியான விஷயங்களை செங்கோட்டையன் டெல்லியிடம் தெரிவிக்கவில்லை. எனவேதான் மீண்டும் செங்கோட்டையன் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். விவரங்களை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் செங்கோட்டையன் அமித்ஷாவிடம் ” சசிகலா, ஓபிஎஸ், போன்ற முக்குலத்தோர்கள் இல்லாமல் அதிமுக பிஜேபி கூட்டணி வெல்ல முடியாது. அந்த சமுதாயத்தினர் அமைதியாக இருப்பார்கள். வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கென்று பெரும் பாதிப்பு ஏற்பட்டால் எந்த. ஆட்சியையும் நீடிக்க விட மாட்டார்கள்.
அவர்களால் எந்தவொரு ஆட்சியையும் ஏற்படுத்தவும் முடியும். கவிழ்க்கவும் முடியும். இதை நான் தமிழகமெங்கும் அம்மாவுடன் பயணித்த போது தெரிந்து கொண்டேன்.
அதிமுகவில் மட்டுமல்ல.திமுகவிலும் முக்குலத்தோர்களே அக்கட்சியை கட்டிக்காத்து வருகிறார்கள். கலைஞர் காலத்திலேயே அன்பில் தர்மலிங்கம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, வே.தங்கப்பாண்டியன், பொன்முத்துராமலிங்கம், தா.கிருஷ்ணன், சுப.தங்கவேலன், தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மூர்த்தி, போன்றோர்கள்தான் கட்சித்தலைமைக்கு நெருக்கமாகவும், அதிகாரத்திலும் உள்ளார்கள்.
வரும் தேர்தலில் ஓட்டுக்கள் பிரியும் நிலை உள்ளதால் 2000 3000 ஓட்டுக்களிலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். எனவே அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைக்கப்பட வேண்டியது அவசியம். கூட்டணி வலிமை பெற்றால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” என்று தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.
நமக்கு கிடைத்த இன்னொரு தகவல் : “தே.ஜ.கூட்டணியிலிருந்து ஓபிஎஸ்ஸூம் டிடிவியும் விலகியிருப்பது வாக்குகளை பிரித்து விடும் என்ற அச்சத்தால் பிஜேபி உண்மை நிலவரங்களை தெரிந்து செங்கோட்டையனை அழைத்துப்பேசியிருக்கிறார்கள்.
நிர்மலா சீத்தாராமன் தமிழர் என்பதால் செங்கோட்டையன் தங்கு தடையின்றி தனக்கு தெரிந்ததை தயக்கமில்லாமல் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்.
முக்குலத்தோர்களின் ‘பவர்’ பற்றி கவுண்டரான செங்கோட்டையன் சொன்னது டெல்லி மேலிடத்தை சிந்திக்க வைத்திருக்கிறது.
இதனால் தற்போது டெல்லி மேலிடம் கட்சியை சசிகலாவிடம் ஒப்படைத்து விட்டு செங்கோட்டையனை பொருளாளராக நியமித்து தேர்தலைச்சந்திக்க தயாராகி வருகிறது.
ஓபிஎஸ் மீது எப்போதும் ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொண்டுள்ள பிரதமர் மோடி அதிமுக தலைமைக்கு ஒரு நிழலாக ஓ.பி.எஸ்.ஸை நியமிக்கலாமா?என்று ஆலோசித்து வருவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே அக்டோபர் 30 தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று டெல்லியில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
- வீரதீர பராக்கிரமன்