திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு, ஸ்டாலின் காட்டேஜ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சாணார்பட்டி, ஆவளிபட்டியை சேர்ந்த சௌந்தரம் மகன் மணிபாரதி(22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரில்
நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மணிபாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
