திண்டுக்கல், பாரதிபுரம், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே போஸ் மகன் கணேஷ்குமார் என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாக்கியசாமி மகன் ஸ்டீபன்(26)என்பவர் மது அருந்துவதற்காக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் கணேஷ்குமார் பணம் இல்லை என்று கூறியதும் ஸ்டீபன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கணேஷ்குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரபாகரன் காவலர் பாலநாகராஜ் ஆகியோர் அப்பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீபனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
