டெல்லியில் காற்று மாசை குறைக்க முதல் முறையாக செயற்கை மழை பொழிய வைக்க, இன்று சோதனை முயற்சியை நடத்தியுள்ளது டெல்லி அரசு.
மழை பொழிய சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் டெல்லி மக்கள்.
Cessna 206H ரக விமானப்படை விமானம் மூலம் டெல்லி வான்பரப்பில் சோடியம் குளோரிட் மற்றும் சில்வர் அயோடைட் ஆகிய வேதியல் பொருட்கள் மேகத்தின் மீது தூவப்பட்டுள்ளன.
