டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில்,
மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி என கான்பூர் IIT இயக்குநர் விளக்கம்.
