மும்பை: பிறந்தநாளை ஒட்டி வீட்டின் வெளியே திரண்ட ரசிகர்களை சந்தித்து கையசைக்க வேண்டாம் என அதிகாரிகள் கொடுத்த அறிவுறுத்தலை ஏற்றார் நடிகர் ஷாருக்கான்.
கூட்டக் கட்டுப்பாடை கருத்தில் கொண்டு ரசிகர்கள் அனைவரின் நன்மைக்காக அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறி, சந்திக்க முடியாததற்கு மன்னிப்பும் கோரினார். ஒவ்வொரு ஆண்டும் வீட்டின் வெளியே ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
