திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப். சாலை பகுதியை சேர்ந்த ஜோசப்தாமஸ் ரிச்சர்டு என்பவருக்கு அரசு வேலை (குரூப்-4) வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பழனியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பெஞ்சமின், அரசு போக்குவரத்துக்கழக மெக்கானிக் கணேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கவிதாகுமாரி ஆகியோர்
ரூ.6 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியதை தொடர்ந்து பள்ளி கல்வித்துறையின் ஆய்வக உதவியாளர் தேர்வை எழுதும் படியும், 2-ல் ஏதாவது ஒரு வேலையை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மேலும் ரூ.2,50,000 ஐ பெற்றுக்கொண்டனர்ஆனால் அரசுவேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து ஜோசப்தாமஸ்ரிச்சர்டு மாவட்ட S.P.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் கணேஷ்குமார், கவிதாகுமாரி, பெஞ்சமின் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
