பிரிந்த அதிமுகவை ஒன்றிணைக்கப்போகிறேன் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவை நம்பி போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அமித் ஷா கைவிட்டு விட்டதாக வரும் தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைந்தால் இன்னும் பலமாக மாறி விடுவார்கள். அதிமுக பாஜக கூட்டணி வெற்றிய பெற்றாலும் தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வளர இந்த ஒருங்கிணைந்த அதிமுக தடையாக மாறலாம். அதனால் இப்படி நீடிப்பதுதான் சரி எனக் கருதுகிறது பாஜக. ஏற்கனவே இங்கு எடப்பாடி பழனிசாமி வலுவாக காலுன்றி விட்டார். ஒற்றுமையாகி விட்டால் இன்னுமும் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து விடும். இடையில நம்மையே எதிர்த்து பாஜக கூட்டணிய வேண்டாம் என பாதியில் விட்டுச் சென்றவர்தான் எடப்பாடி. நம்மை விட்டு விலகி தேர்தலை சந்தித்தார். அதனால என்றைக்குமே அவருடைய டீம் நமக்கு டேஞ்சர்தான். எப்போதும் நாம் அவரை கவனித்துக் கொண்டே இருக்க முடியாது. அதனால் நாம் யோசிக்க வேண்டும்.இந்த ஒருங்கிணைந்த அதிமுக வேண்டாம் என பாஜகவினர் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
ஆனால் இதற்கு மாற்றாக இன்னொரு பக்கம் இப்போது எடப்பாடி அதிமுகவில் சோலோ தலைவராக அவர் மட்டும்தான். அவர் தான் அதிமுகவில் எல்லாமே என்கிற மாதிரி உயர்ந்து இருக்கிறார். இன்னும் இன்னும் பில்டப் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வலுவாக கால் ஊன்றி கொண்டு இருக்கிறார். இப்போது பிரிந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்த அதிமுகவில் ஐக்கியமானால் அது ஒரு வகையில எடப்பாடிக்கு செல்வாக்கை அதிகரிக்கும். சில சமயம் பிடிகொடுக்காமல் போக்கு காட்ட தொடங்குகிறார்.
பலரையும் உள்ள செலுத்தி விட்டொம் என்றால் நாளை எடப்பாடி ஏதாவது முரட்டு பிடித்து இவர்கள் மூலமாக மறுபடியும் அந்த அதிகார போட்டிய தீவிர படுத்தலாம். அது மறுபடியும் நமக்கு சாதகமான சூழ்நிலை உருவாகலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. அதற்கு பல்வேறு செக்குகளை நாம் வைத்டு இருக்கிறோம். உதாரணத்துக்கு சசிகலாவை சுற்றி பணமதிப்பு காலத்தில் பினாமி பெயரில் சுமார் 450 கோடி மதிப்புள்ளான சர்க்கரை ஆலை வாங்கினார். அந்த வகையிலான சிபிஐ குற்றச்சாட்டு இருக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட அந்த பினாமி தடை சட்டத்தின் மூலமாக ஒரு வேளை நடவடிக்கை பாய்ந்தால் சசிகலாவிடம் இருக்கக்கூடிய மிச்ச சொத்த சொத்துக்கள் இருக்கு. அதுகூட அவரால் பயன்படுத்த முடியாமல் போய் விடும். இப்படி ஒரு லாக் போடப்பட்டு இருக்கிறது பாஜக. அவர் மறுபடியும் இணைந்தாலும் நமக்கு பிரச்சனை இல்லை.
எடப்பாடி பழனிசாமியின் பலமும் தெரியும். இன்னொரு பக்கம் முன்னாள் முதலமைச்சரான ஓபிஎஸின் பலமும் தெரியும். இப்ப செங்கோட்டையனுடைய பலமும் தெரியும். ஓபிஎஸ் அவர் தனியாக இருந்தும்கூட தன்னுடைய பலத்தை முழுமையாக ஒரு காட்ட பல வாய்ப்புகள் இருந்தும் அவர் செயல்படவில்லை. செங்கோட்டையன் அவருடைய மாவட்ட எல்லைகளை கடந்து தமிழ்நாடு முழுக்க தன்னுடைய செல்வாக்க அதிகரித்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்த வரைக்கும் தோல்வியை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் எம்எல்ஏக்களை அதிகளவில் வெற்றி பெறவும் வைத்திருக்கிறார். அவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்.
சில நேரங்களில் அவர் பிரிந்து தனியாக செயல்பட்டாலும் நமக்கு பிரச்சனை இல்லை. எந்த சூழலுக்கு அவரை சேர்த்து வைப்பது, எந்த சூழ்நிலையில் அவரை பிரித்து என நம்முடைய கேமை ஆடுவது தான் நம்மளுடைய நுட்பமான அரசியலே. எந்த ஓவரை யாருக்கு குடுத்தால் அவர் சிறப்பாக பந்து வீசி நம்மை ஜெயிக்க வைப்பார் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்கிற ப்ளானையும் அமித்ஷா என்ன கணக்கு போட்டு வைத்துள்ளார்.
செங்கோட்டையன் ஒரு டார்கெட்டோடுதான் பிரஸ்மீட்ட தொடங்கி பல்வேறு கனவுகளோடு களத்தில் இறங்கினார். ஆனால் பல விஷயங்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. அதிமுக வலிமை பெற வேண்டுமானால் யாரை சந்திக்க வேண்டும்? கட்சியினுடைய பொதுச் செயலாளர் யார்? செங்கோட்டையனை தேர்வு செய்தது யார்? பேட்டியில் எடப்பாடியை சொல்கிறபோடு பொதுச் செயலாளர் என்றுதான் குறிப்பிடுகிறார். அவரிடம்தானே எல்லா விஷயத்தையும் கொண்டு போக வேண்டும்? அதை விட்டுவிட்டு யாரோ ஒருத்தர் கிட்ட போய் சொல்கிறார். அமித் ஷாவிடமா உறுப்பினர் கார்டு வாங்கினார்? சொல்லுங்க பார்ப்போம். இது எந்த வகையில் நியாயம் என செங்கோட்டையனுக்கு எதிராகவே தொண்டர்கள் குமுற தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களை பொறுத்த வரை அடிமட்டத்தில் வேலை செய்யக்கூடியவர்கள்.
தொடர்ந்து பாஜகதான் நமது அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது என்கிற விமர்சனத்தை முன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விமர்சனத்தை அதிமுக மீது திமுக முன் வைத்துக் கொண்டு இருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன உடனே ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். ஆனால் இப்போது சில சூழல்களால் கூட்டணியில் சவாரி செய்கிறார்கள். ஆனாலும்கூட அதிமுக தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் போய் கூட்டணி கட்சி சார்ந்த ஒருவரிடம் போய் எங்கள் கட்சி பிரச்சனையை வந்து தீர்த்து வையுங்கள் என்று சொன்னால் இவர் மீதான நம்பகத்தன்மையும் குறைகிறது. லீடர்ஷிப் குவாலிட்டியும் இவரிடம் குறைகிறது.
இவரை நம்பி எப்படி பின்னால் பயணிப்பார்கள் அதிமுக தொண்டர்கள் என செங்கோட்டையன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதையே தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு திரளக் கூடிய ஆதரவாளர்களையும் செங்கோட்டையனே தடுத்து விட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
