பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டமன்றத்துக்கு நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
பிஹார் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளன. கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்தன.
