ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை பெற்று பரிந்துரைகளை தர ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கே.என். பாஷா தலைமையிலான ஆணையம் 3 மாதங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) தலைமையில், டாக்டர்.வி.பழனிகுமார், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு) மற்றும் எஸ்.ராமநாதன், ஐ.பி.எஸ்., (ஓய்வு) ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக விதிமுறைகளுடன் நியமிக்கப்படுகிறார்கள்.
