திண்டுக்கல் நகர் டிஎஸ்பி.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது
கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா, பைக், டிஜிட்டல் எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
