பீஹார் தேர்தல் தோல்வியாவில் ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு – தேஜஸ்வி குடும்பத்தில் நிம்மதி போனது.
லாலு மகள் ரோஹிணி வெளியிட்டுள்ள ஒரு பதிவில்;
‘நேற்று ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமதிக்கப்பட்டனர், இழிவான வார்த்தைகள் வீசப்பட்டன, செருப்புகள் கொண்டு அடிக்க முயற்சித்தினர். நான் உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை’
‘ஒரு மகள் அழுதுகொண்டே பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுச் சென்றாள், நான் என் தாய் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ஒரு அனாதையானேன்.’
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ரோஹிணி உருக்கமான பதிவு. இவர்தான் தந்தை லாலுவுக்கு ஒரு கிட்னியை வழங்கி உயிர் காப்பாற்றினார். அப்போது இவரது தந்தை – மகள் உறவு மெச்சப் பேசப்பட்டது.
