ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று அனைத்து வழக்குகளிலும் கேட்கக்கூடாது.
விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது சரியில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து ஆணையிட்டனர்.
சில நேரங்களில் விரிவான ஆய்வு செய்த பின்பு தான் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் இந்த நீதிமன்றம் தற்போது விரிவான ஆய்வு செய்த பின்பு இந்த இடைக்கால தடையை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
