பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி காரணமாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற திமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர், ‘ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் வேண்டும்’ என கேட்டு வரும் நிலையில், இந்த தேர்தல் தோல்வியால் திமுக தொண்டர்கள் கொந்தளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
