தனித்து போட்டியிடலாம் என விஜய் திட்டமிட்ட பொது, 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட செல்வாக்கு மிக்க வேட்பாளரை எங்கே தேடி பிடிப்பது என்கிற பிரச்சனை விஜய்க்கு உண்டு.
அந்த வகையில் தனித்து போட்டியிடும் முடிவையும் கைவிட்ட விஜய், தற்பொழுது அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு , விஜய்யின் கொள்கை எதிரியான பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தான் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் தற்பொழுது விஜய்யின் முதல் இலக்கு திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதாகும், அப்படி இருக்கையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும், 2031ம் ஆண்டு தனித்து தன்னுடைய தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்கிற இறுதி முடிவை எடுத்து இருக்கிறார் விஜய்.
மேலும் திமுக கொடுக்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எதிர்கொள்ள தற்பொழுது விஜய்க்கு பாஜக துணையும் தேவை படுகிறது. மேலும் பாஜகவுக்கு தமிழகத்தில் திமுகவை வீழ்த்த விஜய்யின் செல்வாக்கு தேவை படுகிறது, இதனால் தொடர்ந்து விஜய்யை தன்பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. தற்பொழுது அந்த முயற்சிக்கு பலன் அளிக்கும் வகையில் விஜய்யும் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட தங்கள் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சி அமையும் போது, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும், மேலும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு 5 அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், அதில் இரண்டு முக்கிய இலாகா வேண்டும் என பல டிமாண்ட் களை விஜய் வைத்துள்ளது அதிமுக தலைமையை ஆட்டம் கான வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
