திண்டுக்கல், வத்தலகுண்டு பகுதியில் சூதாட்ட கிளப்பில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் S.P.தனிப்படையினர் வத்தலகுண்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் உள்ள சூதாட்ட கிளப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய வத்தலகுண்டுவை சேர்ந்த மதன்குமார், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.48 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
