ஆனால் 2021 தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்கிறார் ரங்கராஜ் பாண்டே
ரெங்கராஜ் பாண்டே மட்டுமல்ல.. எடப்பாடி தூக்கி பிடிக்கும் எந்த அதிமுகவினரும் செல்வது அதுதான்.. ஐந்து வருடம் ஆட்சியில் இருந்த பிறகும் 2021 தேர்தலில் 75 தொகுதிகள் வெற்றி பெற்றோமே என்பது..
அதில் முட்டாள்தனம் என நான் கருதுவது என்னவென்றால்..
200 தொகுதிகள் வெற்றி பெற வேண்டிய அதிமுக 75 தொகுதிகளில் முடங்க காரணம் எடப்பாடியின் முரட்டு பிடிவாதம்
1) கலைஞர் போல் ஸ்டாலின் கவர்ச்சிகரமான தலைவர் இல்லை
2) மத்திய அரசின் அபாரமான திட்டங்கள்.. அள்ளி அள்ளி நிதி வழங்கி அதிமுகவிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மத்திய பாஜக உறுதுணையாக இருந்தது
ஆனால் விதி யாரை விட்டது.. எளிதாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டிய அதிமுக படுதோல்வியை சந்தித்தது..
அதிலும் குருமூர்த்தி மட்டும் சசிகலா அவர்களிடம் பேசி அதிமுகவின் வெற்றிக்கு அனைத்து தொண்டுகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டதை பாண்டே உட்பட அனைத்து அதிமுக அணுதாவிகளும் மறந்து விடுகிறார்கள்..
சசிகலாவின் அந்த அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் அதிமுக 25 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது..
அதிலும் எடப்பாடி அதிமுகவின் தகிடு தத்தம் என்னவென்றால்..
அதிமுக 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது
பாஜக 4 தொகுதிகளில்
பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது..
எதிலும் எடப்பாடியின் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது அதை பாஜக நிர்வாகிகள் யாருமே கவனிக்கவில்லை
2016 தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் ஜெயலலிதா அதிமுக தனித்து வெற்றி பெற்ற 133 தொகுதிகளில் 125 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது..
பாமகவுக்கு அதில் 7 தொகுதிகள் பாஜகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது.. மற்றவை எல்லாமே திமுகவுக்கு சாதகமான தொகுதிகளாக தேர்ந்தெடுத்து பாஜக வெற்றி பெறக் கூடாது என்ற தீய எண்ணத்துடனே வழங்கப்பட்டது…
இப்போது கூட்டி கழித்துப் பாருங்கள்
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டிய அதிமுகவை தோற்கடித்தது யார்?
அதை விடுங்கள் அதிமுக பாஜக தனித்துப் போட்டியிட்ட 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெறும்
8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக முதலிடம் பிடித்திருக்கிறது..
85 தொகுதிகளில் பாஜகவை விடவாக்கு குறைந்த வாக்குகள் பெற்று பல இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது..
இந்த லட்சணத்தில் எடப்பாடி அதிமுகவுக்கு தேவையற்ற பில்டப் கொடுப்பதை என்ன சொல்வது..
