ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104ஆவது பிரதமராகவும் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிப்பு.
பதவிக் காலம் 2028 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு.
தனது தலைமைக்கு மக்களின் நேரடி ஆதரவு இன்னும் கிடைக்காததால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவுள்ளதாக சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
