உத்தரப்பிரதேசத்தில் திருமண சடங்கின்போது குரைத்த மணமகள் வீட்டு வளர்ப்பு நாய். ஆத்திரமடைந்து நாயை தாக்கிய மணமகன் வீட்டார். இதனால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வீட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் 8 பேர் காயமடைந்ததாக தகவல். “இத்தகைய குடும்பத்தில் வாழ முடியாது” என்று திருமணத்தை நிறுத்திய மணமகள். ட்விஸ்ட் என்னவென்றால், இந்த ஜோடி காதலர்கள்.
