திண்டுக்கல், வேடசந்தூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று சிங்கிலிக்காம்பட்டிக்கு சென்றது. அந்த பேருந்தில் பூதிபுரம் குரும்பபட்டியை சேர்ந்த சிவநாதன்(20) என்பவர் ஏறினார் தொடர்ந்து எரியோடு சேர்ந்த எலக்ட்ரீசியன் கணபதிராஜா(50) என்பவர் ஏறும் போது மோதியதாக கூறப்படுகிறது. சிவநாதன் கணபதிராஜா மன்னிப்பு கேட்கவில்லை என்று ஆத்திரமடைந்து கத்தியால் கணபதி ராஜாவின் வயிற்றில் குத்தியுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் சிவநாதனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவநாதன், நான் அப்படிதான் குத்துவேன்,யாராக இருந்தாலும் குத்துவேன் கடவுளே இருந்தாலும் குத்துவேன், குத்து, குத்து வெட்டு, வெட்டு, என்னைப் பார்த்து அனைவரும் சிதறனும் பதறனும் என்று திமிராக கூறினார்.
