விஜயின் தவெக பக்கம்வு வரும் தேர்தலில் பெரிய அளவில் ஓட்டுக்கள் செல்லாமல் இருக்க பல தரப்பு மக்களைக் கவரவும், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது திமுக. விஜய் கொள்கை தலைவர்களில் ஒருவராக வீரமங்கை வேலுநாச்சியாரை போற்றி வருகிறார். அந்த வகையில் முதல் கட்டமாக, சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் சிலையை, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், அரசு சார்பில் வரும் 19ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் தவெக கொள்கை தலைவராக வேலு நாச்சியார் அறிவிக்கப்பட்டு இருப்பதால் திமுக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டசபையில் வேலு நாச்சியார் சிலை அமைப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அவசர அவசரமாக சிலையை திறப்பதன் பின்னணியில் விஜய் கட்சி இருப்பதாகவே, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.
வீரமங்கை வேலுநாச்சியார் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்.
அதேபோல் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் எனவும், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் வரும்போதுதான் முக்குலத்தோர் மீது இவர்களுக்கு பாசம் பீரிட்டு வருகிறதோ என நகைக்கிறார்கள் அச்சமுதாய மக்கள்.
