
அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்’ என்ற படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ட்வென்டியத் செஞ்சுரி ஸ்டுடியோஸ், வரும் அக்டோபர் 2ம் ேததி ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற படத்தை மறுவெளியீடு செய்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். கடந்த 2022ல் டிசம்பர் மாதம் வெளியான இப்படம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை படைத்தது. சிறந்த விஷூவல் எபெக்ட்சுக்காக ஆஸ்கர் விருது வென்றது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட், ஸ்டீபன் லாங் நடித்திருந்தனர்.