திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.25 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வருகை சீராக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது.அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 80, 758 பக்தர்கள் தரிசனம் செய்தனர்; 34, 567 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.25 கோடி வசூலானது. பக்தர்களுக்கு 3.44 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,457 பக்தர்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனர்.
