திமுகவின் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், 110 ஆவது வார்டு உறுப்பினருமான சிற்றரசு மீது திருவல்லிக்கேணியை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி துளசிராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாக சிற்றரசு கூறியதன் பேரின், பலரிடம் 69 லட்சம் ரூபாய் பெற்று தந்ததாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் சிற்றரசு ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
