திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
திண்டுக்கல் மாநகராட்சி 21-வது மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவருமான கார்த்திக் புகார் மனு அளித்தார்
அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் என்னிடம் இரவலாக வாங்கிய இன்னோவா காரை திருப்பித் தராமலும், பாலகிருஷ்ணாபுரத்தில் எனக்கு பாத்தியப்பட்ட வீட்டிற்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும்
இதை கேட்டதற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் அடியார்களுடன் வந்து என் வீட்டில் என்னையும் என் வீட்டில் உள்ள பெண்களையும் இது குறித்து புகார் அளித்தால் மதுரையில் இருந்து ரவுடிகளை இறக்கி வெட்டி கொலை செய்து விடுவதாக தெரிவித்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது👆👆👆👆👆
