திருப்பத்தூர் அருகே சொத்தை விற்று பணம் தற மறுத்த தாய் தந்தையை கத்தியால் குத்தியதில் தாய் மரணமடைந்துள்ளார் .அந்த
வழக்கில் சைக்கோ கில்லரான அவரது மகன் வெற்றி செல்வனை. போலீஸார் கைது செய்தனர். கைதான சைக்கோ எதற்காக அப்படிச் செய்தேன் என போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டத்திற்குட்பட்ட கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்.(64) வெங்கடேஸ்வரி (54) தம்பதிகளுக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது . அங்கிருந்தவாரே
இவரது மகன் வெற்றி செல்வன் CA முடித்து ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறான்.
ஒரு கட்டத்தில். சென்னையில் உள்ள வீட்டை விற்று பணம் தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என தந்தையிடம் வெற்றி செல்வன் அவ்வபோது தகராறில் செய்து வந்துள்ளான். அதில் . 2023- ம் ஆண்டு தனது தந்தை ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன் வீட்டை விற்று பணம் தர வேண்டும் . இல்லையெனில் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறான்.
அப்போது. ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், தாய் வெங்கடேஷ்வரி கண்முன்னே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலைக் கொண்டு 14 இடங்களில் கொடூரமாக குத்தி விட்டு தப்பித்திருக்கிறான்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு பிழைத்த ஆதிமூலம் . சைக்கோவாக மாறிப்போன தனது மகன் எந்த நேரத்திலும் வருவான் என பயந்து . கசிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, மனைவி வெங்கடேஸ்வரியை அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் நகர் பாவுசா நகரில் உள்ள மற்றொரு வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் . கடந்த செப். 15-ம் தேதி இரவு சைக்கோ வெற்றிச்செல்வன் தனது அம்மாவை பார்க்க வந்துள்ளான் , அப்போது சொத்தை விற்று தருமாறு தந்தை ஆதிமூலத்திடம் மீண்டும் தகராறில் ஏற்பட்டிருக்கிறான். பயந்துபோன ஆதிமூலம் சைக்கோ மகனுக்கு அஞ்சி அங்கிருந்து இரவோடு இரவாக , கசிநாயக்கன்பட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சைக்கோ வெற்றிச்செல்வன் . தன் தாய் வெங்கடேஸ்வரியிடம் வீட்டை விற்று பணம் அல்லது. வண்டி வாங்கித் தருமாறு வாக்குவாதம் செய்து மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் அவனது தாய் தலையில் பலமாக தாக்கி கீழே தள்ளி . பின்னர் கத்தியால் குத்திக் கொன்று அங்கிருந்து தப்பித்துள்ளான்
மறுநாள் செப். 16-ம் தேதி காலை ஆதிமூலம் திருப்பத்தூர் வீட்டிற்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் தாலுக்கா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் . உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் தப்பித்த சைக்கோவை பிடிக்க . தனிப்படை அமைத்து சென்னை மற்றும் அவனது உறவினர்கள் இடத்தில் தேடி வந்த நிலையில் . சென்னை மாங்காடு பகுதியில் உள்ள அவனது வீட்டில் வெற்றிச்செல்வன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. சுதாரித்து கொண்ட தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சைக்கோ வெற்றிச்செல்வனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சைக்கோ அளித்த புது விளக்கம் மிரண்ட போலீஸ்
நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் பர்னிச்சர் கடை வைப்பதற்காக எனது பெற்றோரிடம் பணம் மற்றும் டூ வீலர் வாங்கி தரச்சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். பணம் தரவில்லை என்றால் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டிருந்தேன்
சென்னை மாங்காட்டில் எனது அம்மா வெங்கடேஸ்வரி பெயரில் உள்ள வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்திருந்தனர் . அதில் எனது அம்மாவின் இறப்புக்கு பின்னர் தான் . அந்த சொத்தை நான் அனுபவிக்க முடியும் என எழுதப்பட்டிருப்பதை கண்டு . கோபமடைந்து எனது அம்மாவை கொலை செய்துவிட்டால், வீட்டை விற்று கொள்ளலாம் என நினைத்து அம்மாவை குறிவைத்து சுத்தியால் தலையில் அடித்து, கீழே தள்ள பின்னர். கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த டூ வீலரை எடுத்து கொண்டு ஜோலார்பேட்டை சென்று, அங்கிருந்து பஸ் மூலம் சென்னை வீட்டற்கு சென்று விட்டேன் .எப்படியோ கண்டுபிடித்து வந்த போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என கூறி இருக்கிறான் ,
அதனைத் தொடர்ந்து சைக்கோ கில்லர் வெற்றிச்செல்வனை கோர்ட்டில் , ஆஜர்படுத்தி வேலூர் சிறையிலடைத்தனர். வீட்டை விற்று பைக்கு வாங்க பணம் தர மறுத்த தாயை கொன்ற சைக்கோ மகனின் செயலால். திருப்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
– மகேஸ்வரன்
