திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வத்தலகுண்டு நவீன் பேக்கரி அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் சிவானந்தபெருமாள்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
