கரூரில் நாளை பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு இன்னும் அனுமதிக் கிடைக்கவில்லை.
நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகே பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூரில் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடலாமா என விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். முந்தைய பரப்புரைக் கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் முறையிடத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கினார். இந்தப் பிரச்சாரம் டிசம்பர் 20 வரை நீடிக்கும். மொத்தம் 38 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கரூரில் நாளை லைட் ஹவுஸ் கார்னர், வேங்கமேடு, எம்ஜிஆர் சிலை அருகில், ஈரோடு சாலை வேலுசாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பிரச்சாரம் போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது.
த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று கரூரை சுற்றி பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் விவாதித்தார். கரூர் போலீஸ் பாதுகாப்பு காரணங்களால் அனுமதியை மறுத்துள்ளது. இது செப்டம்பர் 27 பிரச்சாரத்தை பாதிக்கலாம். விஜய் செப்டம்பர் 24 அன்று கரூர் மற்றும் நமக்கல் மாவட்டச் செயலாளர்களுடன் சந்தித்து, உள்ளூர் பிரச்சினைகளை விவாதித்தார். கரூரில் திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் -17ம் தேதி நடைபெற்றது. அதே இடத்தில் விஜய் பெரிய கூட்டத்தை கூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் பிரச்சாரம் தொடக்கத்தில் இருந்தே பெரும் கூட்டங்களையும், போலீஸ் கட்டுப்பாடுகளையும் சந்தித்து வருகிறது. போலீஸ் 23 நிபந்தனைகளை விதித்தது . மதுரை உயர்நீதிமன்றம் போலீஸ் அனுமதிகளுக்கு வழிகாட்டுதல்களை உத்தரவிட்டது.
விஜயின் பிரச்சாரம் ரசிகர்களின் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் போலீஸ், அரசியல்வாதிகளால் சவால்கள் தொடர்கின்றன. மக்கள் சந்திப்பு அரசியல் பயணத்தில் கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடலாமா (அவசர வழக்காக விசாரிக்க கோரி) என நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோல் இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகப்பை வழங்கவில்லை. எனவே, விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவலர்களை கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேச விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு இன்னும் அனுமதிக் கிடைக்கவில்லை. இந்நிலையில், வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
